யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் நல்லூர் பகுதிகளில் இடம்பெற்றது.
இதன்போது ஒரு வாள், 4 கையடக்க தொலைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 860 போதைமாத்திரைகள் என்பன மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின் போது 24 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட நான்கு பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.