யாழில் வீடொன்றில் பல இலட்சம் நகைகள் கொள்ளை

யாழில் வீடொன்றில் பல இலட்சம் நகைகள் கொள்ளை

வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 21 பவுன் நகைகள் களவாடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் கரவெட்டி மத்தி, கோவில் சந்தை பகுதியில் நெல்லியடி - கொடிகாமம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (09.01.2025) நள்ளிரவு கடந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்த மூவரும் உறக்கத்திலிருந்த சமயம் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 21 பவுன் நகைகளை களவாடிச் சென்றுள்ளனர்.

யாழில் வீடொன்றில் பல இலட்சம் நகைகள் கொள்ளை | Gold Jewellery Worth Stolen From Family In Jaffna

இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்றுக் காலை நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.