கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 10.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! | Important Announcement People Of Colombo Water Cut

அதன்படி, கொழும்பு 01 முதல் 15 , பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை,தெஹிவளை, மொரட்டுவை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.