
போலி இலக்க தகடுடன் காரை ஓட்டிய பெண் வைத்தியர் கைது
போலி இலக்க தகடுகள் பொருத்தப்பட்ட காரை ஓட்டி வந்த பெண் வைத்தியர் ஒருவர் கண்டி நகரில் கைது செய்யப்பட்டதாக கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர், கார் தனது கணவருக்கு சொந்தமானது என கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இவர் அந்த காருக்கான எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை, இது குறித்து விசாரணையில் அவரது கணவரின் சகோதரரின் காரின் இலக்க தகடு காரில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.