
தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
இந்தவாரம் நாளுக்கு நாள் தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்த நிலையில் இன்று தங்க விலை சடுதியாக குறைந்துள்ளது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 264,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1300 ரூபா குறைவடைந்து, 262,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,கொழும்பு செட்டியார் தெருவில் இன்று வியாழக்கிழமை (4) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 284,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 2000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு நேற்றையதினம் 284,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த வார தொடக்கத்தில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 280,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று (03) 2000 ரூபாயால் அதிகரித்து, 284,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32837.5 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.