புலமைப் பரிசில் பரீட்சையில் யாழில் சாதனை படைத்த மிக சிறிய பாடசாலை; அதிபர் பெருமிதம்!

புலமைப் பரிசில் பரீட்சையில் யாழில் சாதனை படைத்த மிக சிறிய பாடசாலை; அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாணம் செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையானது  2025 ஆம் ஆண்டின்  புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது.

செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 30 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் 10 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சையில் யாழில் சாதனை படைத்த மிக சிறிய பாடசாலை; அதிபர் பெருமிதம்! | Scholarship Examination Record Jaffna Small Schoolகுறித்த பாடசாலையானது மிகவும் சிறிய பாடசாலையாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இந்தப் பாடசாலைக்கு போட்டியாக பெரிய பாடசாலைகள் காணப்பட்டதால் மாணவர்கள் அங்கே செல்வதால் குறித்த பாடசாலைக்கு மாணவர்களை உள்ளீர்ப்பது சிரமமாக இருந்துள்ளது.

தற்போது கண்டுள்ள வளர்ச்சியால் போட்டி போட்டுக் கொண்டு இந்த பாடசாலையில் மாணவர்களை சேர்ப்பதற்கு பெற்றோர் மும்முரம் காட்டுவதாகவும் செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன்  பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.  

புலமைப் பரிசில் பரீட்சையில் யாழில் சாதனை படைத்த மிக சிறிய பாடசாலை; அதிபர் பெருமிதம்! | Scholarship Examination Record Jaffna Small School

இந்நிலையில் அதிபரு  மற்றும் ஆசியருக்கும்    சித்தி பெற்ற மாணவர்களுக்கும்  வாழ்த்துக்கள்  குவிந்து வருகின்றது.