கனடா நகரம் ஒன்றிலிருந்து திடீரென வெளியேறும் இலங்கைத் தமிழர்கள் உட்பட குடியேறிகள்!

கனடா நகரம் ஒன்றிலிருந்து திடீரென வெளியேறும் இலங்கைத் தமிழர்கள் உட்பட குடியேறிகள்!

கனடாவில் உள்ள ரொறன்ரோ நகரிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விடயம் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா நகரம் ஒன்றிலிருந்து திடீரென வெளியேறும் இலங்கைத் தமிழர்கள் உட்பட குடியேறிகள்! | Migrants Including Sri Lankan Tamils Leave Torontoஇதன்படி, ரொறன்ரோவில் குடியேறி 5 ஆண்டுகளில் பின்னர்  இலங்கை தமிழர்கள் உட்பட குடியேறிகள் அங்கிருந்து வெளியேற தொடங்குவது அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான வெள்யிட்ட தகவலில்,

ரொறன்ரோ, மொன்றியால் மற்றும் வாங்கூவார் பகுதிகளில் குடியேறிகள் வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடா நகரம் ஒன்றிலிருந்து திடீரென வெளியேறும் இலங்கைத் தமிழர்கள் உட்பட குடியேறிகள்! | Migrants Including Sri Lankan Tamils Leave Toronto

வீட்டுச் செலவு அதிகரிப்பு காரணமாக பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் ரொறன்ரோவை விட்டு வேறும் பகுதிகளுக்கு நகரத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடியேறிகள் வேறு இடங்கள் நோக்கி நகர்வதற்கான பிரதான ஏதுவாக வீட்டு வாடகை மற்றும் வீடுகளின் விலைகள் கருதப்படுகின்றது.