கல்கிஸ்ஸை விடுதி சுற்றிவளைப்பு; சிக்கிய நபர்!

கல்கிஸ்ஸை விடுதி சுற்றிவளைப்பு; சிக்கிய நபர்!

 கொழும்பு கல்கிஸ்ஸை பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியை சோதனைக்குட்படுத்தியதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (11) இரவு பதிவாகியுள்ளது.

கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸை விடுதி சுற்றிவளைப்பு; சிக்கிய நபர்! | Colombo Mount Lavinia Brothel Massage Parlor

சந்தேகநபர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர், கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.