யாழ்ப்பாணம் - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் - நாகப்பட்டினம் கப்பல் சேவையை முன்னெடுக்கும் சுபம் கப்பல் நிறுவனம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

அண்மையில், நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக, காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில்,அதிக பயணிகள் பயணிக்கும் வகையில் மீண்டும் புதிய கப்பல் இயக்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.