யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

வடக்கு தொடருந்து மார்க்கத்திற்கான தொடருந்து சேவைகள் குறித்து போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் தொடருந்துகள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை மஹவ சந்தி வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் - மஹவ சந்தி மற்றும் அநுராதபுரம் தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான புனரமைப்பு நடவடிக்கை காரணமாகக் குறித்த மார்க்கத்தின் ஊடான தொடருந்து சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அநுராதபுரம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தொடருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு | Colombo To Jaffna Train Service Stop January 19

இதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்ற 5 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவிகள் மூலம், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த தொடருந்து மார்க்கங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.