வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை காரணமாக மோதல் இருந்து வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றும் வடகொரியாவின் மேற்கு கடற்கரையோரம் உள்ள நாம்போநகர் என்ற பகுதியில் கடலை நோக்கி குறுகிய தொலைவு செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த ஏவுகணை எவ்வளவு தூரம் சென்றது என்ற தகவலை ராணுவம் தெரிவிக்கவில்லை.