கோர விபத்தில் தனியார் வங்கி ஊழியரான யுவதி பலி

கோர விபத்தில் தனியார் வங்கி ஊழியரான யுவதி பலி

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் காலி, நெலுவை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

ஹயஸ் வான் ஒன்றும், கார் ஒன்றும் மோதியே விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 26 வயது யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கோர விபத்தில் தனியார் வங்கி ஊழியரான யுவதி பலி | Women Death In Road Accident

தனியார் வங்கியொன்றில் பணியாற்றும் மேற்படி யுவதி, வேலை முடிந்து வீடு திரும்பும் வழியிலேயே விபத்தில் சிக்கியுள்ளார்.

ஹயஸ் வானின் சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இரண்டு வாகனங்களிலும் சாரதிகளைத் தவிர வேறு எவரும் பயணிக்கவில்லை என்று தெரிவித்த காவல்துறையினர், விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.