மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ முன்கூட்டிய ஓய்வுக் கொடுப்பனவுகள்

மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ முன்கூட்டிய ஓய்வுக் கொடுப்பனவுகள்

இலங்கை மின்சார சபை, 2,158 ஊழியர்களுக்கு தன்னார்வ முன்கூட்டிய ஓய்வுக் கொடுப்பனவுகள் (Golden Handshake) வழங்க திட்டமிட்டுள்ளது.

இதற்கான மொத்த செலவு 11.554 பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒருவருக்கு கிடைக்கும் தொகை குறைந்தது 9 இலட்சம், அதிகபட்சம் ரூபா 50 இலட்சம் ரூபாய்களாகும்.

இந்த நிலையில், குறித்த செலவை ஈடு செய்யவே, மின்சார கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி பொது பயன்பாடுகள் ஆணையகத்திடம், மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ முன்கூட்டிய ஓய்வுக் கொடுப்பனவுகள் | Voluntary Early Retirement Benefits Eb Employees

அத்துடன் 2026 ஜனவரி–மார்ச் காலத்தில் ஏற்படும் 13.094 பில்லியன் நிதி பற்றாக்குறையை ஈடு செய்யவும், இந்த கட்டண உயர்வு அவசியம் என மின்சார சபை கூறியுள்ளது.

இதற்காக, 11.57 மின்சார கட்டண உயர்வுக்கு மின்சார சபை முன்மொழிந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.