நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் : கல்வி அமைச்சின் அறிவிப்பு
2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளைத் திறப்பது குறித்து முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், 2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணை நடவடிக்கைகள், கடந்த டிசம்பர் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான 2025ஆம் கல்வி ஆண்டு கடந்த டிசம்பர் 22ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26ஆம் திகதியும் நிறைவு செய்யப்பட்டது.
டிசம்பர் 23ஆம் திகதி முதல் ஜனவரி 04ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.