புகையிரத்துடன் ஜீப் மோதி கோர விபத்து

புகையிரத்துடன் ஜீப் மோதி கோர விபத்து

நீர்கொழும்பு - பெரியமுல்ல புகையிரத கடவையில் இன்று (21) பிற்பகல் ஜீப் வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே ஜீப்பில் பயணித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரதத்துடன் மோதிய ஜீப், புகையிரத பாதையில் முன்னோக்கி தள்ளப்பட்டதோடு, உயர் அழுத்த மின்கம்பத்திலும் மோதியது.

அப்போது, ​​உயர் அழுத்த மின்கம்பம் புகையிரதத்தின் மீது சரிந்து விழுந்தது.

ஜீப்பில் சிக்கிய 4 பேரை வெளியே எடுக்க ஜீப்பை இரண்டாக வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த வாகனத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.