முள்ளிவாய்க்கால் சுடரேற்றிய சுமந்திரன்

முள்ளிவாய்க்கால் சுடரேற்றிய சுமந்திரன்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி. தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் , பிரதேச சபைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

பிரதேச சபைக்கு முன்பாக பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் , முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு , பொது சுடர் ஏற்றபட்டது.

தொடர்ந்து , முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

அதன் போது, தமிழரசு கட்சியின் பொது செயலாளர் , வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் , உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.