கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை - படுகாயங்களுடன் கணவன் வைத்தியசாலையில்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை - படுகாயங்களுடன் கணவன் வைத்தியசாலையில்

ஹொரணை -அங்குருவாதொட்ட காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரெமுன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று(31) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் ஹொரணை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட குடும்ப தகராறு காரணமாக தமது மருமகனால் இருவரும் தாக்கப்பட்டுள்ளதுடன், இதில் 58 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அங்குருவாதொட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் 36 வயதுடைய கபுஹேன, கல்பாத பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

கொலைக்குப் பயன்படுத்தியதாக கருதப்படும் ஆயுதம் மற்றும் சந்தேகநபர் வந்த உந்துருளி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரை நாளை (01) ஹொரணை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.