நான்கு பிள்ளைகளின் தாய் விபரீத முடிவு; பெரும் துயரத்தில் உறவுகள்

நான்கு பிள்ளைகளின் தாய் விபரீத முடிவு; பெரும் துயரத்தில் உறவுகள்

   நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தோத்தல்ல தனியார் தோட்டத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

52 வயது மதிக்கத்தக்க தோதல்ல தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின்னர் நாளாந்த வேலை அடிப்படையில் பணிபுரிந்து வந்த பெண் இவ்வாறு தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகின்றது.

நான்கு பிள்ளைகளின் தாய் விபரீத முடிவு; பெரும் துயரத்தில் உறவுகள் | Mother Of Four Children Committed Suicide

கிடைக்கபெற்ற தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் நேரில் வந்து பார்வை இட்ட பின்னர் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.