உலகின் மிக உயர்ந்த பெண்!

உலகின் மிக உயர்ந்த பெண்!

உலகின் மிக உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்த ரமிசா கெல்கி (24) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலகளவில் பல சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் இந்தாண்டுக்கான உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்த ரமிசா கெல்கி (24) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்

கெல்கி வீவர் சிண்ட்ரோம் என்கிற அரிய நோயால் பாதிக்கப்பட்டதால் அதன் பக்கவிளைவாக அதிகப்படியான வளர்ச்சியை அடைந்திருக்கிறார். இதனால் தற்போது இவர் 7 அடி, 0.7 இன்ச் உயரத்துடன் இந்தாண்டிற்கான மிக உயரமான பெண் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். முன்னதாக இவரே 2014 ஆம் ஆண்டு உயரமான இளம்பெண் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.

இதுகுறித்து ரமிசா கெல்கி , ‘ நான் பிறந்ததிலிருந்தே உடல் சார்ந்து பிரச்னைகளுடனே வளர்ந்து வந்தேன். பின் ஸ்கோலியோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டதால் அதீத உயரத்தை அடையத் தொடங்கினேன். மேலும் நான் மாற்றுத்திறனாளி என்பதால் சக்கர நாற்காலியின் உதவியின்றி எங்கும் செல்லமுடியாது’ எனத் தெரிவித்திருக்கிறார்.