
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீது மின்சார பொறியியலாளர்கள் குற்றச்சாட்டு
மின்சார சபைக்காக போட்டி எரிபொருள் கொள்முதலை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் அனல் மின்சார நிலையங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் இந்த முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை மின்சாரசபைக்கான எரிபொருள் தேவைகளுக்கு போட்டி சர்வதேச ஏலத்தை அங்கீகரிக்க வேண்டும் இதன் மூலம், குறைந்த விலை மின்சார உற்பத்தியை உறுதி செய்யமுடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.