
இலங்கையில் தாய்க்கும் மகனுக்கும் அரங்கேற்றப்பட்ட பெரும் கொடூரம் ; சிக்கிய சந்தேக நபர்
இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கொடவில, கரந்தெனிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து, இலங்கையில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , கடந்த 11ஆம் திகதி கரந்தெனிய பகுதியில் பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில், குறித்த சந்தேக நபர் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.