
மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, மின்சார கட்டண திருத்தம் குறித்த வாய்மொழி மூலமான பொது ஆலோசனைகளை செப்டம்பர் 18 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை மின்சார கட்டணம் குறித்த எழுத்துபூர்வ முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வது ஒக்டோபர் 7 ஆம் திகதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முதல் அமர்வு திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.