துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹினெவிகல பகுதிய்ல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளான 43 வயதுடைய ஒருவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.