மீண்டும் நடமாட்டக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

மீண்டும் நடமாட்டக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தற்சமயம்  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நாளாந்த கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாட்டில் 1,941 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ள நிலையில், இது 45 நாட்களின் பின்னர் நாளொன்றில் பதிவான குறைந்தளவிலான தொற்றாளர்கள் எண்ணிக்கையாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.