சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச நாடுகளில் 779,374 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த காலப்பகுதியில் உலகளவில் 11,511 கொவிட் 19 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரேஸிலிலேயே கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, அங்கு நேற்றைய தினத்தில் மாத்திரம் 2,865 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை, பிரேஸிலில் கொவிட் 19 தாக்கம் அதிகரித்துள்ளதாக அங்குள்ள வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொற்றா நோய்களை கொண்டவர்களும் அங்கு உயிரிழப்பதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

பிரேஸிலில் இதுவரையில், 13,900,134 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக 371,889 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது