திடீரென இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச்சந்தை வர்த்தக நடவடிக்கை

திடீரென இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச்சந்தை வர்த்தக நடவடிக்கை

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று (07) காலை 9.53 மணிக்கு ஆரம்பமான சில நிமிடங்களிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று முதல் முறையாக இரண்டாம் நிலை வர்த்தகத்தைத் தொடங்கிய முக்கிய நிறுவனமொன்றின் பங்குகளில் ஏற்பட்ட அசாதாரண ஆரம்ப விலை இதற்கு முக்கிய காரணமாகும் என கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தை விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளில் வழக்கத்திற்கு மாறான விலை மாற்றங்கள் அவதானிக்கப்பட்டதால், சந்தையின் ஸ்திரத்தன்மையைப் பேண இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திடீரென இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச்சந்தை வர்த்தக நடவடிக்கை | Sudden Suspension Colombo Stock Exchange Trading 

குறித்த நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்ட திடீர்  மாற்றம் குறித்த தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை ஆய்வுகள் முடிந்த பின்னர், வர்த்தகம் மீண்டும் தொடங்கும் நேரம் குறித்து அறிவிக்கப்படுமென தெரிவிக்கின்றன.

சந்தையில் இவ்வாறான அசாதாரண விலையேற்றம் அல்லது வீழ்ச்சி ஏற்படும்போது, முதலீட்டாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு தற்காலிக நிறுத்த முறையை பங்குச் சந்தை நிர்வாகம் பயன்படுத்துவது வழமையாகும்.