
ICCயின் புதிய தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே தேர்வு
ர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) புதிய தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவராக இருந்த ஷஷாங்க் மனோகரின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் குறித்த பதவியில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில், ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்தில் புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரை இம்ரான் க்வாஜா இடைக்கால தலைவராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது