அறிகுறிகள் இன்றி அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

அறிகுறிகள் இன்றி அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொவிட் 19 வைரஸ் பரவலின் போது பெரும்பாலான தொற்றாளர்கள் எவ்விதமான நோய் அறிகுறிகள் இன்றியே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் தொற்று நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் தொடர்பில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முகக்கவசங்கள் அணிவதன் அவசியத் தன்மை தொடர்பிலும் குறித்த தடுப்பு மையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் 19 உள்ளிட்ட அனைத்து கொரோனா வைரஸ் பரவல்களும் அறிகுறியற்ற தொற்றுநோய்களின் ஊடாக ஏற்படுவதாகவும் குறித்த ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது.

மேலும், அனைத்து தொற்று நோய்களிலும் 50 சதவீதமானவை அறிகுறிகள் இன்றியே ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து பெரும்பாலானவர்களுக்கு வைரஸ் தொற்று இலகுவில் தொற்றிவிடுவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.