பலூன்களுடன் வீட்டிற்குள் பறந்த குழந்தை! பேரதிர்ச்சியில் உறைந்த பெண்..... அதிர வைத்த காட்சி

பலூன்களுடன் வீட்டிற்குள் பறந்த குழந்தை! பேரதிர்ச்சியில் உறைந்த பெண்..... அதிர வைத்த காட்சி

ஒரு குழந்தையின் முதுகில் பலூன்கள் கட்டப்பட்டதால் அந்த குழந்தை 'பறப்பது' போன்ற ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ட்விட்டரில் 'மேக் அண்ட் பெக்கி காமெடி' என்ற பக்கத்தில், ஷேர் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு வீட்டில் பெண் ஒருவர் வருகிறார்.

அப்போது ஒரு அறையின் கதவு பகுதியில் பலூன்கள் கட்டப்பட்டவாறு குழந்தை மேலே பறப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

உடனடியாக அனைவரையும் அழைக்க குரல் கொடுத்தவாறே அந்த குழந்தையின் அருகில் ஓடுகிறார். அப்போது குழந்தை காற்றில் பறப்பது போல இருக்கிறது.

இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாக மாறக்கூடும், இதனால் குழந்தை கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த குழந்தையை மீட்க விரைந்து ஓடுகிறார்.

"ஐயோ கடவுளே! எமர்சன் உடனடியாக இங்கு வா", அவளை சீக்கிரம் பிடிக்க வேண்டும் என கூறியவாறே அந்த பெண் ஓடுகிறார். 

இருப்பினும், அந்த வீடியோவில் ஒரு திருப்பம் உள்ளது! அவள் குழந்தைக்கு அருகே சென்று பிடிக்க செல்கையில் , குழந்தைக்குப் பின்னால் இரண்டு கைகள் காணப்படுகின்றன.

ஆம், ஒருவர் குழந்தைக்கு பின்னால் நின்று குழந்தையை பறக்குமாறு செய்துள்ளார். இறுதியில், அது ஒரு குறும்புத்தனமாக வீடியோ என்பது தெரியவந்தது.

எமர்சன் என்பவர் தான் குழந்தையை காற்றில் பறப்பது போல தூக்கிக்கொண்டு பின்னால் நின்று கொண்டிருந்தார். குழந்தையை எமர்சன் பிடித்திருப்பதை பார்த்த பின்னர் தான் அந்த பெண் நிம்மதியடைந்தார்.