பெண் மருத்துவருக்கு மைத்துனி செய்த மோசமான செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பெண் மருத்துவருக்கு மைத்துனி செய்த மோசமான செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிதாக விசேட மருத்துவராக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவருக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தைத் திருடியதாக கூறப்படும் அவரது மைத்துனியை ரூ.10,000 ரொக்கப் பிணையிலும் ரூ.100,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல குருணாகல் பதில் நீதிவான் அனுமதித்தார்.

அனுராதபுரத்தைச் சேர்ந்த வைத்தியரொருவரால் இந்த சம்பவம் குறித்த குருணாகல் பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டது.

பெண் மருத்துவருக்கு மைத்துனி செய்த மோசமான செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Nephew S Act Against Female Doctor

இந்த சம்பவத்தில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் முறைப்பாட்டளரான வைத்தியரின் மைத்துனி (கணவரின் சகோதரி) ஆவார்.

முறைப்பாட்டாளர் உடலியக்க மருத்துவ நிபுணராக நியமிக்கப்பட்டதாகவும், தொடர்புடைய நியமனக் கடிதம் சுகாதார அமைச்சிலிருந்து அஞ்சல் மூலம் அவருக்கு அனுப்பப்பட்டதாகவும்  நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட நியமனக் கடிதம் காணாமல் போனதாகவும், அதனால் புதிய பதவியின் கடமைகளை ஏற்க முடியவில்லை என்றும்  நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, காவல்துறை ஆரம்ப விசாரணைகளை நடத்தி சந்தேக நபரை கைது செய்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ததாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.