Breaking News
Home / latest-update / நடுவானில் விமானத்தில் வாந்தி எடுத்த நபர் – கொரோனா வார்டில் அனுமதி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நடுவானில் விமானத்தில் வாந்தி எடுத்த நபர் – கொரோனா வார்டில் அனுமதி

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் காரணமாக சீனாவில் 636 பேர் பலியாகியுள்ளனர். சீனா மட்டுமல்லாது ஜப்பான், சிங்கப்பூர், தைவான், வியட்நாம், மலேசியா, இந்தியா என மொத்தம் 23 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியாவில் கேரளா மற்றும் சில இடங்களில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லி-புனே விமானத்தில் இன்று காலை பயணித்த ஒருவர் நடுவானில் வாந்தி எடுத்ததால், விமானம் தரையிறங்கிய உடன் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

‘இன்று காலை டெல்லியில் இருந்து புனேவுக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்றது. அப்போது குமட்டுவதாக கூறிய ஒரு பயணி, விமானத்தில் வாந்தி எடுத்தார். இதையடுத்து விமானம் புனே விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு புனே நகரில் உள்ள நாயுடு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்’, என ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் கூறினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறி உள்ளது என கருதப்படுபவர்களை கண்காணிக்கும் 3 மருத்துவமனைகளில் புனேவின் நாயுடு மருத்துவமனையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.





Check Also

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் மாலை 6.20 இற்கு வெளியான விசேட செய்தி……!

கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் நோக்கில் கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் …