விபத்தில் சிறுவன் பலி

விபத்தில் சிறுவன் பலி

சிலாபம் குருநாகல் பிரதான வீதியின் முகுனுவடவான பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

சிலாபம் எங்கட்டுவத்த, முகுனுவட்டவான பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துச் சம்பவம் இடம்பெற்ற வேளை, விலத்த பிரதேசத்தை நோக்கிப் பயணித்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மேதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரையும், பின்னால் இருந்து பயணித்த சிறுவனையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த குறித்த சிறுவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழதுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.