யாழில் இலக்கு வைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகள் - சிக்கிய நபர்கள்

யாழில் இலக்கு வைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகள் - சிக்கிய நபர்கள்

யாழ். காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்று(14) யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க யூரோ மற்றும் இலங்கை மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டன.

மேலதிக விசாரணை

இதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை துரிதப்படுத்தியிருந்தனர்.

யாழில் இலக்கு வைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகள் - சிக்கிய நபர்கள் | Two Arrested In Connection With Theft In Jaffna

விசாரணைக்கமைய காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர்நடவடிக்கை எடுத்துள்ளனர்.