இலங்கையிலுள்ள ஆண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையிலுள்ள ஆண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஆண்களிடையே பாதுகாப்பற்ற ஓரினச்சேர்க்கை உறவுகள் அதிகரித்ததே இந்த அபாயம் வேகமாக அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

நோயாளிகளின் எண்ணிக்கை

ஆண்டுதோறும் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை பொதுவாக படிப்படியாக அதிகரித்து வந்தாலும் குறிப்பாக 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சமீபத்திய தரவுகளைப் அவதானிக்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையிலுள்ள ஆண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Hiv Risk Higher Among Men In Sri Lanka Ministry

குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஆண்களிடையே அதிக எண்ணிக்கையிலான எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் இந்த மாவட்டங்களின் அதிக மக்கள்தொகை மற்றும் அடிக்கடி நிகழும் இடம்பெயர்வு ஆகியவை இதற்குக் காரணங்கள் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.