Breaking News
Home / latest-update / மிக கொடூரமாக சித்திரவதைகளின் பின்னரே கொலை! யாழில் மரணமான பெண் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மிக கொடூரமாக சித்திரவதைகளின் பின்னரே கொலை! யாழில் மரணமான பெண் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பெண், மிக கொடூரமான சித்திரவதையின் பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நீதி விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

61 வயதுடைய பெண் ஒருவரே  வீட்டு வளவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலை நேற்றிரவு இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண், மிக கொடூரமாக சித்திரவதையின் பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, குறித்த பெண்ணின் வயிற்றுப்பகுதியில் சூடு வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் காப்புகள் என்பனவும் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் நீதிவான் அ.பீற்றர் போல் மற்றும் சட்ட மருத்துவ நிபுணர் மயூரதன் ஆகியோர் நீதி விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான யாழ் போதனா வைத்தியசாலையில், வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

தளபதி 64-ல் அனிருத் இசையில் பாடும் விஜய்

விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக …