மீன் இறக்குமதி விவகாரத்தில் நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியது :

மீன் இறக்குமதி விவகாரத்தில் நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியது :

டின் மீன் இறக்குமதி விவகாரத்தில் நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் சுட்டிக்காட்டினார்

எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் முன்வைக்கட்ட வாய்மூல வினாவுக்கு பதிலளித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ஸ யுகத்தில் டின் மீன்களை இறக்குமதி செய்வதற்கு வருடாந்த செலவு சுமார் 2.5 பில்லியன் ரூபா வரையிலேயே காணப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஸ யுகத்தில் அனைத்து வருடங்களிலும் இந்த நிலைமையே காணப்பட்டது.இவ்வாறு 10 வருடங்களாக கட்டுப்பாடுகளுடன் கொண்டுவரப்பட்டதன் ஊடாக அந்த நிலைமை காணப்பட்டது.

அத்துடன் டின் மீன் தொழில் நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான ஒரு சந்தை காணப்பட்டது.ஆனால் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நியாயமற்ற வகையில் டின் மீன்களுக்கான தீர்வை வரிகளை குறைத்து அவற்றை கொண்டு வந்தார்.

2014 ஆம் ஆண்டில் டின் மீன் உற்த்திக்காக  ஐயாயிரத்து 151 மில்லிய் ரூபா செலவான நிலையில், அவர்கள் வந்தபின்னர் 2015 ஆம் ஆண்டில்  11 ஆயிரத்து 918 மில்லியனாக செலவு உயர்வடைந்தது” என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.