பெண் ஒருவர் படுகொலை

பெண் ஒருவர் படுகொலை

வெலம்பொட, பரண பட்டிய பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளதாகவும் அவரின் கழுத்தில் வெட்டுக்காயம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

68 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெலம்பொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.