பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் 109 ரன்களுக்குள் சுருண்டு பெங்களூர் அணி படுதோல்வி

பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் 109 ரன்களுக்குள் சுருண்டு பெங்களூர் அணி படுதோல்வி

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

 

 

ஐபிஎல் கிரிக்கெட்டின் 6-வது போட்டியில் பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

 

அதன்படி,  முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப்  கேஎல் ராகுலில் (69 பந்தில் 132 ரன் - நோட் அவுட் ) அபார சதத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது,

 

 

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் - ஆரோன் பிஞ்ச் ஜோடி களம் இறங்கியது. 

 

முதல் ஓவரை காட்ரெல் வீசினார். ஓவரின் 4-வது பந்தில் படிக்கல் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்காமல் ஜோஷ் பிலிப்பை களம் இறக்கினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் 2-வது ஓவரின 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

 

அடுத்து வந்த விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் 3-வது ஓவரின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 4 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார்.

 

இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 7.5 ஓவரில் 53 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

 

அடுத்த ஓவரிலேயே டி வில்லியர்ஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஆர்சிபி 8.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்து திணறியது.

 

பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷிவம் துபே நிதினாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுந்தர் 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

 

ஷிவம் துபே 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து பெங்களூர் அணி 17 ஓவர்கள் முடிவிலேயே

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

 

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.  

 

சிறப்பாக பந்து வீசிய பஞ்சாப் அணியின் முருகன் அஸ்வின் மற்றும் ரவி பிஷோனி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். 

 

69 பந்துகளில் 7 சிக்சர்கள் 14 பவுண்டரிகள் உள்பட 132 ரன்கள்  குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.