இலங்கையில் கொரோனா வைரஸின் தற்போதைய நிலை! உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்

இலங்கையில் கொரோனா வைரஸின் தற்போதைய நிலை! உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்

உலகளவிய ரீதியில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையில் அதனை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக சாத்தியமாகி உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, மேலும் ஒரு கட்டமாக நிதியுதவி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உலக சுகாதார அமைப்பினால் புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுது.

தங்கள் உறுப்பு நாடுகள் வைரஸ் தொடர்பிலான பிரதிபலிப்பு குறித்து உலகிற்கு தெரியப்படுத்துவதே இந்த அறிக்கையின் நோக்கம் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த அறிக்கையில் 75 முதல் 88 வரையான பக்கங்களில் இலங்கை தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கொவிட்-19 வைரஸிற்கு பதிலளிக்கும் விதம் வேகமாகவும், தீர்மானங்களை எடுப்பதிலும், ஒருங்கிணைப்பதிலும் சிறப்பாக உள்ளது. சுகாதார அமைச்சு, சுதேச மருத்துவ சேவைகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்றவற்றின் வழிகாட்டுதலுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் முழு சமூகத்தையும் ஒன்றிணைத்து உயர்மட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் தகவலை ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் பதவிவிட்டுள்ளார்.

அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக உலக மக்களை தௌவுப்படுத்தவுதற்கான புதிய வீடியோவில் இலங்கை பதிலளிக்கும் விதம் தொடர் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.