வீடு இல்லையா - இதோ உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

வீடு இல்லையா - இதோ உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

அரச மற்றும் தனியார் பிரிவுகளில் சேவையாற்றும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு அவர்களின் வருமானத்திற்கு ஏற்ற வீட்டினை பெற்றுக்கொடுப்பதற்காக வீட்டு திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆரம்ப மூலதனத்தை ஏற்பாடு செய்து கொள்ள 5 வருடத்திற்கு செல்லுப்படியாகும் 25 பில்லியன் ரூபா கடன் பத்திரம் ஒன்றை வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படும் வீடுகளை விற்பனை செய்வதில் பெறும் வருமானத்தினை கொண்டு மீண்டும் அந்த கடன் தொகையை நிவர்த்தி செய்துக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளை பெறவுள்ளவர்களுக்கு நிவாரண கடன் வட்டியை பெற்றுக்கொடுக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய பெறுனர்கள் 25 முதல் 30 வருடங்கள் தவணைக்கட்டணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.