கொரோனா நெருக்கடியில் விபரீதம்: குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு!

கொரோனா நெருக்கடியில் விபரீதம்: குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்தியாவில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக திருமணம் உள்ளிட்ட விஷேசங்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் ஒன்றுக் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சட்டவிரோத குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பல குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சில குழந்தைகளுக்கு ஒன்லைன் மூலம் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் பின்தங்கிய கிராமபுறங்களில் வாழும் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. குறிப்பாக மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பண்டமாற்று முறை மூலம் கல்வி நடவடிக்கைள் தொடரப்படுவதாக சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியிருந்தது.

இந்நிலையில் இந்த காலப்பகுதியில் குழந்தைகள் மீதான வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளுக்கான அவசர எண்ணான 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஆய்வின் தகவல்படி 64 வீதமான குழந்தை திருமணங்கள் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜுன் மாதத்தின் இறுதிவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.