திடீரென சரிந்து விழுந்த 60 அடி உயர தேர் ; சூழ்ந்திருந்த பக்தர்களுக்கு நடந்த சம்பவம்

திடீரென சரிந்து விழுந்த 60 அடி உயர தேர் ; சூழ்ந்திருந்த பக்தர்களுக்கு நடந்த சம்பவம்

இந்தியாவின் வேலூர், பாலாற்றங்கரையில் ஆண்டுத்தோறும் நடத்தப்படும் மயானக்கொள்ளை தேர்த்திருவிழா இம்முறையும் நடைபெற்றது.

இதில் காளி தேவியாக எழுந்தருளிய அம்மன் திருத்தேரில் மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். வழிநெடுகிலும் இருந்த பக்தர்கள் அம்மனை மனமுருக தரிசனம் செய்தனர்.

திடீரென சரிந்து விழுந்த 60 அடி உயர தேர் ; சூழ்ந்திருந்த பக்தர்களுக்கு நடந்த சம்பவம் | 60 Foot Tall Temple Chariot Suddenly Collapses

அப்போது எதிர்பாராதவிதமாக 60 அடி உயர தேரானது கீழே சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அறிந்த மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தியதோடு, இனி இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது என விழா குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.