அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை
ஜனவரி 1, 2016இற்குப் பிறகு பொதுப் பணியில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்தும் புதிய சுற்றறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் படி, 01.01. 2016 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான விதிகளைத் திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஜனவரி 1, 2016 அன்று அல்லது அதற்குப் பிறகு வழங்கப்பட்ட அனைத்து நியமனக் கடிதங்களும் அதற்கேற்ப திருத்தப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஏ.லோகபண்டார வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் வழங்கப்படும் நியமனக் கடிதங்களிலும், அரசாங்கத்தின் கொள்கையின்படி திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.