கோர விபத்தில் தாயுடன் சென்ற 3 வயது சிறுமி மரணம்

கோர விபத்தில் தாயுடன் சென்ற 3 வயது சிறுமி மரணம்

கம்பளை-நாவலப்பிட்டி வீதியில் நேற்று சம்பவித்த வாகன விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

கம்பளை நோக்கி பயணித்த கார், பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் காயமடைந்த நிலையில் கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சையின் பயனின்றி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

கோர விபத்தில் தாயுடன் சென்ற 3 வயது சிறுமி மரணம் | 3 Year Old Kid Dies In A Accident

உயிரிழந்தவர் 03 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளை தாயார் ஓட்டிச் சென்றதாகவும், காயமடைந்த தாயும் மற்ற 07 வயது சிறுமியும் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட காரின் சாரதி இன்று கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.