ஒரே இரவில் 62 கோடிக்கு அதிபதியான இலங்கையர் தொடர்பில் தகவல் வெளியானது
இலங்கை லொத்தர் வரலாற்றில் இதுவரை வழங்கப்பட்ட அதிகூடிய பரிசுத் தொகையான 629,855,919.60 ரூபாவை வென்றவர் தொடர்பான விபரங்களை அபிவிருத்தி லொத்தர் சபை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
இந்த அதிர்ஷ்டகரமான வெற்றிச் சீட்டு பதுளை மாவட்டத்தின் கிராந்துருக்கோட்டை பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நடைமுறையிலுள்ள சட்ட விதிகளுக்கு அமைய, இந்த மொத்தப் பரிசுத் தொகையிலிருந்து 14 சதவீத வரி அறவிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அபிவிருத்தி லொத்தர் சபையினால் விற்பனை செய்யப்படும் சீட்டுக்களின் ஊடாகக் கிடைக்கும் வருமானம் ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்கப்படுவதுடன், அவை நாட்டின் அபிவிருத்தி மற்றும் நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
வெற்றியாளரின் விபரங்கள் மற்றும் சீட்டின் உண்மைத்தன்மை போன்றவற்றை நிதி மற்றும் சட்ட ரீதியாக உறுதிப்படுத்திய பின்னர், உத்தியோகபூர்வமாகப் பரிசுத் தொகை கையளிக்கப்படவுள்ளது.