மொரிஷியஸ் தீவுக்கு அருகில் 40 டொல்பின்கள் உயிரிழப்பு

மொரிஷியஸ் தீவுக்கு அருகில் 40 டொல்பின்கள் உயிரிழப்பு

சிதைவடைந்த ஜப்பானிய கப்பலிருந்து வெளியேறிய எண்ணெய் கசிவானது கடல் நீரை மாசுபடுத்தியுள்ளது.

இதன் காரணமாக கிழக்கு ஆபிரிக்காவின் மொரிஷியஸ் தீவுக்கு அருகில் குறைந்தது 40 டொல்பின்கள் உயிரிழந்து கிடந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஜூலை முதல் கடலில் எண்ணெய் கசிந்து வரும் ஜப்பானிய கப்பல் குறித்து விசாரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதேநேரம் குறித்த கப்பலும் திங்கட்கிழமை அகற்றப்பட்டது.

சுமார் 4000 டொன் எரிபொருளை ஏற்றுக் கொண்ட பயணித்த எம்.வி.வகாஷியோ என்ற ஜப்பானுக்கு சொந்தமான இந்த கப்பலானது ஜூலை 25 அன்று மொரீஷியஸ் பகுதியில் ஒரு ஒரு பவளப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது.

டொல்பின்கள் ஆபத்தான முறையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து நூற்றுக்கணக்கான மக்கள் மொரீஷியஸின் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.