பூட்டை உடைத்து தப்பியோடிய இளைஞர்; இரு பொலிஸார் பணி நீக்கம்

பூட்டை உடைத்து தப்பியோடிய இளைஞர்; இரு பொலிஸார் பணி நீக்கம்

தங்காலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் சிறையறை கதவின் பூட்டை வெட்டி தப்பிச் சென்ற சம்பவத்தால் , தங்காலை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர், மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட , தங்காலை, பல்லி குடாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே தப்பிச் சென்றுள்ளார்.

பூட்டை உடைத்து தப்பியோடிய இளைஞர்; இரு பொலிஸார் பணி நீக்கம் | Man Escaped Breaking Lock 2 Police Dismissed

குறித்த இ​ளைஞன் கடந்த திங்கட்கிழமை (05) அன்று 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.