நான்கரை லட்சம் ரூபா பணத்துடன் உயிரிழந்த யாசகர் ; ஷாக்கான பொலிஸார்!

நான்கரை லட்சம் ரூபா பணத்துடன் உயிரிழந்த யாசகர் ; ஷாக்கான பொலிஸார்!

கேரளாவில் விபத்தில் உயிரிழந்த யாசகர் வைத்திருந்த பையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கேரளா, ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்த அனில் கிஷோர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

நான்கரை லட்சம் ரூபா பணத்துடன் உயிரிழந்த யாசகர் ; ஷாக்கான பொலிஸார்! | Beggar Die With 4 And A Half Lakh Rupees In Kerala

இதனால் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , இரவோடு இரவாக யாசகர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

இந்நிலையில் மறுநாள் காலை அவர் வீதியோரம் உயிரிழந்து கிடந்தார். அவரது உடைமைகளை பொலிஸார் பரிசோதித்தபோது அதில் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

இந்திய நாணய மதிப்பில் நான்கரை லட்சம் ரூபா பணம் இருந்துள்ளதுடன் சவுதி ரியால்கள் சிலவும் அவரிடம் இருந்தன. இந்நிலையில் யாசகரின் அந்தப் பணத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.