இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்த அதிரடி கருத்து..!
இலங்கையில் உள்ள சகல அஞ்சல் நிலையங்களையும் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வகையில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அஞ்சல் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.