திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் ; பெண்ணை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த பொலிஸார்
இந்தியாவில் விருதுநகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் கணவரை இளந்த பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்து, அதை வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டி ரூ.80 லட்சம் வரை பறித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றறுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விருதுநகரரை சேர்ந்த பெண் ஒருவர் பியூட்டி பார்லர் மற்றும் துணி தைக்கும் கடை நடத்தி வந்துள்ளார். அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், ஆமத்தூரில் 35 வயது பொலிஸ் அதிகாரியாக பணியாற்றிய பொலிஸார் அந்தப் பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
ரூ.80 லட்சம் வரை பணம் பறிப்பு
பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, அவருடன் நெருக்கமாக இருந்த தருணங்களை வீடியோவாக பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி, பலமுறை ரூ.80 லட்சம் வரை பணம் பறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அந்தப் பெண்ணின் மகளை மருத்துவராக படிக்க வைப்பதாக கூறி கூடுதல் தொகைகளையும் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் பணத்தை திருப்பி தருமாறு பெண் கேட்டபோது, பணம் வழங்க மறுத்ததுடன், வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாகவும், கொலை மிரட்டலும் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பெண் விருதுநகர் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், குறித்த பொலிஸ் அதிகாரி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் அதிகாரியை கடந்த நவம்பர் மாதம் முதல் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.